districts

நாடாளுமன்றத்தில் தோழர் பி.ராமமூர்த்தி அன்று ஆற்றிய விவாதங்களின் பிரதிபலிப்பு மதுரை விழாவில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை பேச்சு

மதுரை,செப்.21- நாடாளுமன்றத்தில் தோழர் பி.ராம மூர்த்தி அன்று ஆற்றிய விவாதங்களின் பிரதிபலிப்பு இன்று சிபிஎம் எம்.பி.க்களின் பேச்சுக்க ளில் காணமுடிகிறது என்று மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும் சிஐடியு ஸ்தாபகத் தலைவருமான ‘தோழர் பி.ராமமூர்த்தியின் சட்டமன்ற உரைகள்’ நூல் மதுரையில் வெள்ளியன்று வெளியிடப்பட்டது.இந்நூலை பி.ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது புதல்வியர் டாக்டர் ஆர்.பொன்னி, வழக்கறிஞர் ஆர்.வைகை ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஆர்.வைகை பேசியதாவது :

அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கிறது மோடி அரசு .  ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. 

நாட்டு நலனுக்காக மக்கள் நலனுக்காக உழைக்க வேண்டும் . மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் மிக அருமையாகப் பேசுகிறார் ;விவாதிக்கிறார். அவரது விவாதங்கள் தோழர் பி.ராமமூர்த்தி அன்று வித்திட்ட விவாதங்களின் பிரதிபலிப்பாகும். ஒரு கம்யூனிஸ்ட் பன்முகத்தன்மையோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.