districts

img

வாலிபர் சங்க தலைவர்களை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர்

கிருஷ்ணகிரி, செப் 29- வாலிபர் சங்க தலைவர் களை மிரட்டிய காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, மத்திகிரி பகுதியில் நீண்ட கால மாக பல இடங்களில் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையும், சூதாட்டமும் கொடி கட்டிப் பறக்கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கங்கள் சார்பில் மத்திகிரி காவல் நிலை யத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திகிரி காவல் நிலை யம் முன்பு மண்டை உடைந்த நிலையில் நின்று கொண்டிருந்தவருடன் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இள வரசன், கட்சியின் செயற் குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் பேசிக்  கொண்டிருந்துள்ள னர். அப்போது காவல் நிலை யத்திலிருந்து வெளியே வந்த உதவி ஆய்வாளர் சிற்றரசு, சங்கத் தலை வர்கள் இருவரையும் ‘எதுக்குடா அவனை விசாரிக்கிறீங்க’ உங்க வேலையைப் பார்த்து கிட்டு போங்கடா என்றும் இல்லையென்றால் ‘உங்க ளையும் உள்ளே தள்ளிடு வேன்’ என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கட்சியின் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் தலை மையில் கட்சித் தலை வர்கள் காவல் துறை அதி காரிகளிடம் விசாரித்த போது முறையான பதில் இல்லை.  இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசை கட்சியின் சார்பில் மத்தகிரி பேருந்து நிலையம் நிலையம் அருகே மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட பொறுப்பு செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சுரேஷ், பிரகாஷ், மகாலிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் ராஜா ரெட்டி முனியப்பா, சிஐடியு மாவட்டச் செய லாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.