கிருஷ்ணகிரி, மார்ச் 3- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வாய்ப்பில் மாற்றுத்திற னாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும் என திட்ட இயக்குநர் வந்தனா கார்க் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: அரசாணைப்படி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய அளவில் ஓர் முன்னோடி முயற்சியாகும். இதுகுறித்து விரி வாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிற வேலை அட்டை வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,755 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 2ஆவது செவ்வாய்க்கிழமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் முன்னிலை யிலும் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 10ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை பயன்படுத்தி, தகுதியு டைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.