districts

img

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கிருஷ்ணகிரி மாநாடு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, ஜூலை 4- தலித் மக்களுக்கு ஆதி திரா விட நலத்துறையால் வழங்கப்பட்ட 42 இலவச மனை களுக்கான வழக்கை விரைந்து முடித்து வீடுகளை கட்டித்தரவேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கிருஷ்ண கிரி மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கிருஷ்ண கிரி மாவட்ட 4 ஆவது மாநாடு ஓசூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆனந்த குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் முத்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணைத் தலைவர் இருதயராஜ் வரவேற்றார்.  மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் துவக்க உரை யாற்றினார். மாவட்டச்  செய லாளர் நாகேஷ்பாபு  வேலை அறிக்கையையும் பொரு ளாளர் சிவப்பிரகாஷ் வரவு-செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர், மாநகர செயலாளர் சிபி. ஜெயராமன், திராவக் கழக மாவட்டத் தலைவர் வன வேந்தன், பன்னியாண்டிகள் சமூக நல சங்கத் தலைவர் சீனி வாசன், எழுத்தாளர் சு.பொ.அகத்தியலிங்கம், சிஐடியு செயலாளர் ஸ்ரீதர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில பொதுச் செயலாளர்  கே.சாமுவேல்ராஜ் நிறைவுரை யாற்றினார். தமிழகத்தில் நடை பெறும் சாதிய ஆணவ படு கொலைகளை தடுக்க தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதிய பாகுபாடு, மற்றும் தீண்டாமை பிரச்சனைகளில் மாவட்ட நிர்வாகம் உடனுக்குடன் தலை யீடு செய்ய வேண்டும், மாவட்டத்தில் ஆதி திராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்து வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும்.                 சாணமாவு ஆதிதிராவிட மக்களுக்கு 1999இல் வழங்கப்பட்ட 42 வீட்டு மனை கள் இடத்திற்கான உயர் நீதி மன்ற வழக்கை தமிழக அரசு விரைந்து நடத்தி முடித்து வீடு கட்டிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள பன்னியாண்டிகள் சமூகத்திற்கு சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதை கைவிட்டு அவர்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.

நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ஆனந்தகுமார், செயலாளராக எம்.ஜி நாகேஷ்பாபு, பொருளாள ராக சிவ பிரகாஷ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.