கிருஷ்ணகிரி, டிச. 17- கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டி ருந்த திம்மாபுரம் பகுதி யில் மாரியப்பன் (23), ஓசூரில் மூர்த்தி (21), காவே ரிபட்டணத்தில் வசந்த் (34), பேரிகையில் அரிஷீத்தப்பா (45), பர்கூரில் வளர்மதி (50), தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்த னர். அதேபோல் ராயக் கோட்டை பகுதியில் கோபி நாத் (46), தேன்கனிக் கோட்டை பகுதியில் செந்தில் (48), கெலமங்க லம் பகுதியில் முரளி (21), கல்லாவி பகுதியில் சார்லஸ் (23) ஆகியோரையும் கைது செய்தனர். அவர் களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.