கரூர், மார்ச் 23- கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் கிராம ஊராட்சி திருமுக்கூடலூரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர், கலந்து கொண்டார். சோமூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ஜி.செந்தில்குமார் தலைமை வகித்தார் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.லி யாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் வாணிஸ்வரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சீனிவாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர். திரு.அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள சிக்கத் தம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தி ற்கு தலைவர் சசிகலா கார்த்திக் தலைமை வகித் தார். துணைத்தலைவர் நீலவேணி, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை எழுத்தர் உமா ஆகி யோர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.