நாகர்கோவில், மார்ச் 22 - உலக தண்ணீர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் துவக்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், உலக தண்ணீர் தினத்தினையொட்டி, ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா. அரவிந்த் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி யும், களநீர் பரிசோதனை குறித்த கண்காட்சியினை பார்வை யிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இன்றைய தினம் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற 93846 55560 என்ற கைபேசி எண்ணை அணுகவும். மேலும், பொது மக்கள் குடிநீர் தரத்தை பரிசோதனை செய்ய ஆசாரிப்பள்ளம், தபால் நிலையம் மாடியில் உள்ள குடிநீர் ஆய்வகத்தை அணுக லாம் என்றார் . இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகப் பொறி யாளர் எஸ்.திருநாவுக்கரசு, உதவி நிர்வாகப் பொறியா ளர்கள் எச்.மீரான்சலீம், எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.ஹரிகோ விந்த், டி.சங்கர், ஆர் வி.பிரேம் நாத், எஸ்.ராஜேந்திரன் மற்றும் வாரிய பொறியாளர்கள்.கலந்து கொண்டனர்.