districts

img

பேராசிரியர்களுக்கு அறிவியல் இயக்கம் பாராட்டு

கரூர், மார்ச் 19 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் 29 ஆவது தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஆய்வுகளை, சிறப்பாக ஆய்வு செய்த அன்னை மகளிர் கல்லூரி பேராசிரியர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர் மாவட்டக்குழு, அன்னை மகளிர் கலைக் கல்லூரி இணைந்து பாராட்டு விழா நடத்தின. கூட்டத்திற்கு அன்னை மகளிர் கல்லூரியின் தலைவர் ப.தங்கராஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் ரோட்டரி வி.எஸ்.பாஸ்கர் வரவேற்று பேசினார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் தீபம் சங்கர், மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாஷா, கல்லூரியின் முதல்வர் சாருமதி, விங்ஸ் ரோட்டரி சங்கம் தலைவர் சந்திரசேகரன், அறிவியல் இயக்க   ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெயராஜ் ஆகியோர் பேராசிரியர்களுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கி பேசினர். பேராசிரியர் கிருஷ்ணவேணி  நன்றி கூறினார்.   அன்னை மகளிர் கல்லூரியில் 20 பேர் கொண்ட அறிவியல் இயக்க புதிய கிளை துவக்கப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.