கரூர், நவ.16 - கரூர் மாவட்டம் சுக்காலியூரை அடுத் துள்ள செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந் தவர் குணசேகரன். இவர் வழக்குரைஞ ராக உள்ளார். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே கட்டிட பணிகளை குணசேக ரன் கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் புதிய கட்டிடத்திற்குள் பயன் படுத்திய கட்டைகளை பெயர்த்து எடுப்ப தற்காக, கரூர் தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான சிவா என்கிற ராஜேஷ் (40) என்பவர் செவ்வாய்க் கிழமை, தனது நண்பரும், சென்ட்ரிங் தொழி லாளியுமான மணவாசியை அடுத்த மலைப் பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (38) ஆகி யோர் மாலையில் குணசேகரனின் புதிய வீட்டில் கட்டப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டிக் குள் இறங்கி மரங்களை பெயர்த்தெடுக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். அப்போது புதிய கட்டி டத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துக் கொண்டிருந்த கரூர் தாந்தோன்றிமலை யை சேர்ந்த மோகன்ராஜ் (23) என்பவர் ராஜேஷையும், சிவக்குமாரையும் காண வில்லையே என தேடி கழிவுநீர் தொட்டியை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அவரை யும் விஷவாயு தாக்கியதால் அவரும் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து கட்டிடம் அருகே நின்று கொண்டிருந்த, கட்டிட மேஸ்திரியான கரூர் வெங்கமேட்டை சேர்ந்த கார்த்திக் என்பவர் முட்டுக்கட்டைகளை அவிழ்க்க சென்ற இரு வரையும் காணவில்லை என கழிவுநீர் தொட்டி அருகே சென்றபோது, விஷவாயு நெடி வந்ததால் அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர் இதுதொடர்பாக கரூர் தீய ணைப்பு நிலையத்திற்கும், தாந்தோணி மலை காவல்துறைக்கும் தகவல் கொடுத் துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை யினர் விஷவாயுவை சாக்குகள் மூலம் களையச் செய்து தொட்டிக்குள் கிடந்த மூன்று பேரின் உடல்களையும் வெளியே எடுத்து, உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத் திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஏ.சுந்தரவதனம் மற்றும் கரூர் கோட்டாட்சியர் ரூபினா ஆகியோர் பார்வை யிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.