districts

img

சாலை, தெரு விளக்கு வசதி கோரி நூதனப் போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

கரூர், டிச.12- விஸ்வநாதபுரத்தில் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தரக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பிச்சை  எடுக்கும் போராட்டம் நடைபெற்  றது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் அரா ஜகமாக கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் கிரா மத்திற்கு செல்ல குண்டும், குழியு மான மண் சாலையே உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், பொது மக்கள் இரவு நேரங்களில் செல்லும்  பொழுது தெருவிளக்கு இல்லாத தால் அச்சத்துடன் நடந்து செல் கின்றனர்.   எனவே, தங்களது கிராமத் திற்கு தார்ச்சாலை, தெரு விளக்கு கள் அமைத்து தர வலியுறுத்தி 2  ஆண்டுகளாக தொடர்ந்து போராட்  டம் நடத்தியும், 62 முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ் வித பயனும் இல்லை.  இந்நிலையில், கோரிக்கை களை நிறைவேற்றாத, அரசு அதி காரிகளை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி யில்லை என்று கூறிய மருதூர் பேரூ ராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், கட்சியின் குளித்தலை ஒன்றியக்  குழு சார்பில் கிராம பொதுமக்களை திரட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் இரா.முத்துச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.ராஜு, மாவட்  டக் குழு உறுப்பினர் ஹோச்சுமின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, அங்கு வந்த காவல்துறையினர் போராட் டத்திற்கு அனுமதி இல்லை எனக்  கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.  இதுகுறித்து சிபிஎம் கரூர்  மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு கூறுகையில், ‘‘கரூர் மாவட்டம் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் தார்ச்சாலை, தெரு விளக்கு அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு அனு மதி இல்லை எனக் கூறி, கரூர் மாவட்ட காவல்துறையினர் மிக வும் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட வர்களை கைது செய்தனர். காவல்  துறையின் இந்த போக்கு வன்மை யாக கண்டிக்கத்தக்கது. கரூர் மாநகராட்சி நிர்வாகம் எந்தெந்த இடத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்று புதிதாக ஒரு உத்தரவை போட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின் றனர். கரூர் மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என தெரி வித்தார்.