கரூர், மார்ச் 2 - கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சி லர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரூர் மாநகராட்சி 41 ஆவது வார்டில் எம்.தண்டபாணி, புகளூர் நகராட்சி 22 ஆவது வார்டில் இந்து மதி அரவிந்தன், அரவக்குறிச்சி பேரூ ராட்சி 1 ஆவது வார்டில் கே.வி. கணேசன், பழையஜெயங்கொண் டம் பேரூராட்சி 10 ஆவது வார்டில் தேவி நாகராஜன் ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட்டு மாபெரும் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் உறுதிமொழியை ஏற்று கவுன்சிலராக பதவி ஏற்றுக்கொண்ட னர். அவர்களுக்கு கட்சியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆணையாளர்கள், அதிகாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.கந்தசாமி, ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், சிஆர்.ராஜாமுகமது, ஒன்றிய செயலாளர்கள் எம்.ஆறு முகம், ராஜேந்திரன் கலந்து கொண்ட னர்.