கரூர், பிப்.25 - தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக் கிணங்க, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் வழிகாட்டு தலின் படி, கரூர் மாவட்டத்தில் பொது நகை கடன் தள்ளுபடி மூலம் மொத்தம் 19554 நபர்க ளுக்கு 69.49 கோடி மதிப்பீட்டில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் தென்னிலை தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்கங்களில் 5 பவுனுக்கு உட்பட்ட பொது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் ஒரு குடும்பத் திற்கு 5 பவுனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்க ளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற திட்டத்தின் கீழ், தென்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 30 பயனாளிகளுக்கு ரூ.11.80 லட்சம் மதிப்பிலான பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களும், பய னாளிகளின் நகைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள் நலத்திட்டங்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு பயன்பெற்ற பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.