கரூர், ஜூன் 27 - கரூர் அரசு மருத்துவகல்லுரி மருத்து வமனை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த அதிமுக ஆட்சியில் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையாக அறிவித்து அரசாணை வெளி யிடப்பட்டது. அதற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு படுக்கை வசதி கள், மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, தற்போது உள்ள திமுக அரசு குளித் தலை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தாமல், கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவனையை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக கொண்டு செல்லும் நோக்கில் செயல் பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே மின்சாரத் துறை அமைச் சர் செந்தில்பாலாஜி கரூரில் செய்தி யாளர்களிடம் பேட்டியளித்த போது, குளித்தலை அரசு மருத்துவமனையில், கரூர் தலைமை அரசு மருத்துவ மனைக்கு இணையாக மருத்துவ வசதி கள் கொண்டு வரப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். அமைச்சர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரவியது. இதனை யடுத்து தமிழக அரசின் அரசாணைப் படி, குளித்தலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமைனயை கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக்குழு சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக, பாஜக, விஜய் மக்கள் இயக்கம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபிஐ கட்சி, வளரும் தமிழகம் கட்சி மற்றும் குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் சார்பில் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு ‘கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை’ என்று பெயர் பலகை அமைக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜு, கே.சக்திவேல், இரா.முத்துச் செல்வன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் தர்மலிங்கம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சசிகுமார், சிவா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், குளித்தலை வட்டார தலைவர் சீத.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் சக்திவேல், அவிநாசி, தேமுதிக மாவட்ட பொருளாளர் கதிர்வேல், மாவட்ட பொறுப்பாளர் ரங்கநாதன், நகரச் செயலாளர் விஜயகுமார், விஜய் மக்கள் இயக்கம் சதாசிவம், அமமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட னர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர். குளித்தலை சுங்ககேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் பேரணியாக குளித்தலை அரசு மருத்துவமனை முகப்பில் பெயர் பலகை வைக்க சென்றனர். இதற்கு காவல் துறை அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தி னர். பின்னர் அனைவரும் கரூர்- திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.