கரூர், மே 20 - குளித்தலை தலைமை அரசு மருத்துவ மனையை கரூருக்க இடம்மாற்றும் நட வடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கரூரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரூர் காந்திகிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
இதனையடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கட்சியின் குளித்தலை ஒன்றியக்குழு சார்பில் கோரிக்கை வைத்து கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பல முறை கோரிக்கை மனுக்களை வழங்கி, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழக அரசு உத்தரவு
இதனால் தமிழக அரசு குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது. ஆனால் அதற் ்குண்டான எந்தவித பணிகளையும் மேற்கொள்ளாமல், போதிய மருத்து வர்கள், செவிலியர்கள் உட்பட பணியாளர் களை நியமிக்காமல் இருந்தது. இதை யடுத்து, சிபிஎம் சார்பில் உடனடியாக தேவையான மருத்துவர்கள், செவிலியர் கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையை கரூரில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு இடம் மாற்றுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டத்தில் குளித்தலை நகரம் முக்கிய நகரமாக உள்ளது. திருச்சி - கரூர் சாலையில் குளித்தலை நகரம் உள்ளது. குளித்தலை நகரத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. குளித்தலை நகரத்தை சுற்றியும் வளையப்பட்டி, பணிக்கம்பட்டி, இனுங்கூர், அய்யர்மலை, தோகமலை, பஞ்சப்பட்டி, லாலாபேட்டை, பணிக்கம்பட்டி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும் ஆயிரக் கணக்கில் குளித்தலை நகரத்திற்கு பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனைக்கு விபத்து, மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறு வதற்கு உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளியாகவும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியமாக உள்ள குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை , தொடர்ந்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேற்கண்ட கிராம மக்களுக்கு இந்த அரசு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைதான் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இங்கு தலைமை மருத்துவமனை இல்லையென்றால், 50 கி.மீட்டர் பயணித்து கரூர் நகரத்திற்கும், 40 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் திருச்சிக் கும் ஏழை மக்கள் நோயாளிகளுடன் அலை யும் அவலநிலை ஏற்படும். இப்படி நீண்ட தூரம் செல்லும்போது உயிரிழப்பும் நிகழக்கூடும்.
சிபிஎம் போராட்ட அறிவிப்பு
தமிழக அரசும் கரூர் மாவட்ட நிர்வாக மும் உடனடியாக குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, தொ டர்ந்து குளித்தலையிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு கோரிக்கை வைக்கிறது. குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, குளித்தலையில் தொ டர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், குளித்தலை நகராட்சி மற்றும் குளித்தலையை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் தொடர் போராட் டங்கள் நடத்தப்படும் என கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.