districts

img

எல்ஐசி தனியார் மயமாக்கு நடவடிக்கையை கைவிடுக பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

 கோவை, மே. 14 –  பொதுத்துறை நிறுவனமாக உள்ள எல்ஐசியை தனியார் மய மாக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க மண்டல மாநாடு வலியுறுத் தியுள்ளது. கோவை மண்டல பொது இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 27  ஆவது மாநாடு சனியன்று நடை பெற்றது. திருச்சி சாலையில் உள்ள சரோஜ் நிலையத்தில் நடை பெற்ற மாநாட்டிற்கு மண்டல தலைவர் பி.குருசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எச்.வேணுகோபால் அறிக்கை முன்வைத்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென்மண்டல கூட்டமைப்பின் இணைச் செயலாளர் வி.சுரேஷ், தென் மண்டல பொது இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கத்தின் இணைச்செய லாளர் எஸ்.பாலசுப்ரமனியம் ஆகி யோர் மாநாட்டில் பங்கேற்று சிறப் புரையாற்றினர். இதில் பொதுத் துறை பொது இன்ரசூரன்ஸ் நிறு வனங்கள் மற்றும் எல்ஐசி தனியார்மயமாக்கும்நடவடிக்கையைகைவிட வேண்டும். 2017 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வினை வழங் கிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய் வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண் டும். தொழிலாளர் விரோத சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் மாநாட்டில் தீர்மானமாக நிறை வேற்றப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு
முன்னதாக, இம்மாநாட்டில் சங்கத்தின் தலைவராக எம்.கருப் பையா, பொதுச்செயலாளராக ஆர்.வேணுகோபால், பொருளா ளராக என்.கோவிந்தராஜ் உள் ளிட்ட12 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் நேசனல், ஓரியன்டல், யுனைடெட் இந்தியா மற்றும் நியூ இந்தியா ஆகிய பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பிரதி நிதிகளாக பங்கேற்றனர்.