districts

img

குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி 1000 ஆண் குழந்தைகளுக்கு நிகராக 963 பெண் குழந்தைகள்

நாகர்கோவில், ஜுலை 11- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும், 1000  ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 963 பெண் குழந்தைகள் தான் பிறக்கின்றன என்று சுகாதாரத் துறை புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு குடும்ப பெரியவர்களும் பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிப்பதோடு, பெண் சிசுக் கொலையை தடுக்க வேண்டும். இதற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக முகப்பில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தினம் விழிப்பு ணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணியினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் திங்களன்று (ஜுலை 11) கொடியசைத்து துவக்கி வைத் தார். அப்போது அவர் கூறுகை யில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய தினம் உலக மக்கள் தொகை தினத் தையொட்டி பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள்  நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் விழிப்பு ணர்வு பேரணி துவக்கி வைக்கப் பட்டுள்ளது. இத்தினத்தின் முக்கிய நோக்கமாக இளம் வயது திரு மணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், முதல் குழந் தைக்கும் இரண்டாவது குழந்தைக் கும் இடையே தேவையான இடை வெளி குறித்தும் பொதுமக்களி டையே எடுத்துக் கூறப்படவுள்ளது என்றார். அதனைத்தொடர்ந்து,  பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் துவங்கி, டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி உயர்நிலைப்பள்ளி, வேப்பமூடு ஜங்சன், அண்ணா பேருந்து நிலை யம் வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி  மருத்துவ மனையில் முடிவடைந் தது.  இவ்விழிப்புணர்வு பேரணியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவ, மாணவி கள், மாவட்ட மருத்துவ அலுவலர் கள், பணியாளர்கள், கிராமிய இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள்.