காஞ்சிபுரம், நவ.10- காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, அரக்கோணம், திருப்திக்கு கூடுதல் ரயில்களை இயக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.நேரு, காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பின் போது மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் கே.நேரு, காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர். இதே மனுவை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் அனுப்பியுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது: காஞ்சிபுரம் சென்னைக்கு அடுத்து பெரு உயர் மாநகரமாக மாறிக்கொண்டு வரு கிறது. குறிப்பாக சமீபத்தில் தமிழக அரசும் ஒன்றிய அரசும் அறிவித்துள்ள பரந்தூர் பசுமை விமான நிலையம் உட்பட காஞ்சிபுரம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தி லிருந்து சென்னைக்கும், காஞ்சிபுரத்தி லிருந்து அரக்கோணம், திருப்பதிக்கும் கூடுத லாக ரயில் இயக்கிட வேண்டும். காஞ்சிபுரம் மாநகரத்திற்க்கு அருகே சென்னை மாநாகர் இருப்பதால். ஆயிரக்கணக்கான தொழி லாளர்களும், கல்லூரி மாணவர்களும் சென்னைக்கு சென்று வருகின்றனர். காஞ்சி புரத்தில் குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும். காஞ்சி மாநகருக்கு நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும். ரயில் நிலையங்களில் மேற்கூரை இல்லாத நத்தப்பேட்டை, பாலூர், பழையசீவரம் ரயில் நிறுத்தங்களில் பயணியர் மேற்கூரை அமைக்க வேண்டும். மேலும் நத்தம்பேட்டை ரயில் நிலையத்தில் காலை நேரங்களில் மாணவர் அதிகம் செல்வதால் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை கடற்கரை ரயில் நிலை யத்திற்கு செங்கல்பட்டு வழியாகவும், அரக்கோணம் வழியாகவும் சுற்று வட்டப் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்கவேண்டும், புதுச்சேரி – திருப்பதி பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டதன் விளை வாக செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே உள்ள ரெட்டிபாளையம், வில்லி யம்பாக்கம், பழையசீவரம், நத்தப்பேட்டை, தக்கோலம் ரயில் நிலைய நிறுத்தங்கள் நீக்கப்பட்டு விட்டன. இவற்று மாற்று ஏற்பாடு களை செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது.