districts

அரசு மருத்துவமனையின் பிண அறையில் குளிர்சாதன பெட்டி பழுதானதால் துர்நாற்றம்

காஞ்சிபுரம், செப்.21- காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிணவறையில் குளிர் சாதனபெட்டி பழுதடைந்துள்ளதால் பாதுகாக்கப்பட்ட உடல்களிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்ததுள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் 200 கிராமங்களில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்கொலைகள் செய்து கொண்டவர்களின் உடல்கள், சென்னை , பெங்களூரு , திருப்பதி , பாண்டிச்சேரி , செங்கல்பட்டு மார்க்கங்களில் தேசிய, மாநில, மாவட்ட சாலைகளில் விபத்துகளில் உயி ரிழந்தவர்களின் உடல்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் 10 உடல்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டு வரப்படு கிறது. இந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் உள்ள ஆறு குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப் படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த குளிர் சாதன பெட்டிகள் பழுதடைந்து உள்ளது.   இதன் காரணமாக அதில் வைக்கப்பட்டு இருந்த உடல்கள் அனைத்தும் அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதை யடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் பிணவறையில் இருந்த சடலங்கள் அனைத்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், திருபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுகிறது. விபத்துகளாலும், தற்கொலைகளாலும் உறவினர்களை இழந்தவர்கள் உடல்களை பெற செங்கல் பட்டுக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கும் அலை யும் நிலை உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.