districts

ஏரிகளை தூர்வார 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்துக

காஞ்சிபுரம், செப்.2- காஞ்சிபுரம் மாவட்டத் தில் ஏரிகளை தூர்வார 100 நாள் வேலை திட்ட தொழி லாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஏரி கள் மாவட்டம்என அழைக்கப்படும் ஒருங்கி ணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஏரி கள் அதிக அளவில் உள்ளன. பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 16 பெரிய ஏரிகள் உள்பட 912 ஏரிகள் உள்ளன. அதுமட்டுமன்றி கிராமப் புறங்களில் 1,942 ஏரிகளும் உள்ளன. இதனால், விவ சாயம் செழிப்பாக நடை பெற்றதால் தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சி யம் எனவும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 ஒன்றியங்களிலும் உள்ள 633 ஊராட்சிகளிலும் சுமாராக 1,900 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில்  மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டமான மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வரத்துக் கால்வாய் சீரமைத்தல், குளம் தூர்வாருதல், நீர்வள பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு, வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல், நீர் தேங்கும் பகுதி களில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப் படுகின்றன. மேலும், கிராம அளவில் 100 நாள் வேலைத்திட்ட தொழி லாளர்களை இணைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளை தூர்வாரி இருந் தால் ஏரிகளின் கொள்ள ளவு அதிகரித்திருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலை யிலும் இரண்டாம் போக சாகுபடியே முழுமை யாகச் செய்ய முடி யாமல் விவசாயிகள் சிரமப் பட்டனர். எனவே, 100 நாள் வேலைத்திட்ட தொழி லாளர்களைக் கொண்டு ஏரியை தூர்வாரியிருந்தால் ஏரியில் நீரின் கொள்ளளவு அதிகரித்து முப்போகம் சாகுபடி செய்திருக்க முடி யும் என்று ஆதங்கப்படு கின்றனர்.