districts

விவசாயிகளிடம் வேளாண் அதிகாரி இளங்கோவன் அடாவடி

காஞ்சிபுரம், செப் 30 – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளியன்று (செப்.30) நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ப.இளங் கோவன் அறிக்கை ஒன்றை வாசிக்க தொடங் கினார். அப்போது விவசாயிகள் சங்க செயலாளர் கே.நேரு எழுந்து  அறிக்கை தொடர்பாக பேச  முற்பட்டார். அப்போது  வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் ” நீங்கள் அரசியல் கட்சியை  சேர்ந்தவர். கட்டப்பஞ்சாயத்து போல பேசக் கூடாது உட்காருங்கள் ” என்று  சொன்னார்.  இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கூட்டத்திற்குள் வந்தார். அவரிடம்   ப.இளங்கோவன் கூறிய வார்த்தையை திரும்ப பெறமாறு விவசாயிகள் வலியுறுத்தி னர். இதையடுத்து இளங்கோவன் வருத்தம்  தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் கூட்டம்  ஆட்சியர் தலைமையில் தொடர்ந்து  நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது இளங்கோவன்  மீது   விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.