districts

img

சின்ன சேலத்தில் உழவு பணி தொடங்கிய விவசாயிகள்

கள்ளக்குறிச்சி, அக்.13- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னம் சேலம் அருகே காளசமுத்திரம், தத்தா திரிபுரம், குரால், பாக்கம்பாடி, நயினார் பாளையம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விவசாயிகள் வயல்களில் உழவுப் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மானாவாரி நிலங்களில், தானிய பயிர்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில், சின்னவெங்காயம், பீட்ரூட், தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவ சாயிகள் தயாராகி வருகின்றனர்.  சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். அதேபோல் இம்முறையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.