கள்ளக்குறிச்சி, டிச. 24- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சிறப்பு செயலருமான ஹர் சகாய் மீனா ஆய்வு மேற்கொண்டார். உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பரா மரிக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படு வதை ஆய்வு செய்த அவர் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்குமாறு அறிவுறுத் தினார். அதனை தொடர்ந்து ஏ.சாத்தனூர் கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக நிலத்தின் புல தணிக் ்கையை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாடூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களின் தரம் மற்றும் இருப்பு நிலைகளை குறித்து ஆய்வு செய்து, தரமான அளவு களில் வழங்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, உலகங்காத்தான் கிரா மத்தில் அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சளி, காய்ச்சல், இருமல் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தினார். பின்னர், பொதுமக்க ளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மருத்துவ பெட்டகத்தை பயனாளிகளுக்கு வழங்கி னார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.