கள்ளக்குறிச்சி, மார்ச் 26- உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தில் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு பட்டா வழங்கப்படும் என வட்டாட்சி யர் உறுதிஅளித்ததன் பேரில் போரா ட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பரமேஸ்வரி மங்கலம் கிராமத் தில் குடியிருக்கும் பூம்பூம் மாட்டு க்கார மக்களுக்கு குடியிருக்க குடி மனை பட்டா கேட்டு திங்களன்று (மார்ச்.27) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் தலைமை யில் ஞாயிறன்று (மார்ச்.25) நடை பெற்ற சமாதான பேச்சுவார்த்தை யில் உடனடியாக பட்டா வழங்கு வதற்கான ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் காரணத்தால் போராட்டம் ஒத்திவைக்கப்பட் டுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் வி.ரகு, ஒன்றிய குழு உறுப்பினர் கே.ஜெயமூர்த்தி, கிளை செயலாளர்கள் கே.ரங்கதுரை, எம்.முத்து, கே.செந்தில்குமார் ஆகி யோர் உடன் இருந்தனர்.