districts

img

பயன்பாட்டுக்கு வராத சமுதாயக் கூடம்: கீரப்பாளையத்தில் நூதன போராட்டம்

சிதம்பரம், மார்.25- கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக் கூடம் ஒன்று கட்டப்பட்டது. ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த வாடகையில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், 10 ஆண்டுகளாக சமூதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்காமல் சிமண்ட் மூட்டைகள், கம்பிகள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பராமரிப்பு செய்வது கிடையாது. தங்கள் இல்லங்களில் நடக்கும் சுப நிகழ்சிகளை குறைந்த வாட கையில் நடத்த சமுதாய கூடம் இல்லா மல் ஏழை மக்கள் மிகவும் சிரமப்பட்டு  வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் ரூ. 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். வேறு வழியின்றி கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால்,  சமுதாயக் கூடத்தை மக்களின் பயன்பாட்டு கொண்டு வரக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அடுத்தக் கட்டமாக, மேளதாள  முழங்கச் சீர்வரிசை பொருட்களு டன் சம்பந்தம் கலக்கும் நூதன போராட்டத்தை அறிவித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கீரப்பாளை யம் ஒன்றிய செயலாளர் செல்லையா தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முருகன், சிவராமன், செம்மலர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே சீர்வரிசை பொருட்களை வைத்து போராட்டத் தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறை மற்றும்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில்  சமூதாய கூடத்தைச் சீர் செய்வதற்கு திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி இருப்பதாகவும் அனுமதி கிடைத்ததும் சீரமைப்பு பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலி கமாக ஒத்தி வைத்தனர்.