சிதம்பரம், ஆக 29- சிதம்பரம் நகரம் இளமை யாக்கினார் கோவில் தெரு வில் வசிக்கும் பச்சை யப்பன், தாமோதரன், லஷ்மி, பேபி சந்திரா உள்ளிட்ட 7 பேரின் குடி யிருப்புகளுக்கு கடந்த 1 மாதத்திற்கு முன் மின் இணைப்பு வழங்கப் பட்டது. அந்த இடம் லால்கான் பள்ளி வாசலுக்கு சொந்தமானது என்றும், கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்றும் மின்வாரியத்திற்கு லால்கான் பள்ளிவாசல் நிர்வாகம் கடிதம் அளித்த னர். இந்நிலையில் பல கட்ட எதிர்ப்புக்கு இடையே திங்களன்று (ஆக. 29) மின்சார வாரிய அதி காரிகள் காவல் துறை உதவி யுடன் சம்பந்தப்பட்ட வீடு களில் மின் இணைப்பை துண்டிக்க வந்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதி காரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் இந்த இடம் அரசுக்குச் சொந்த மானது. நீதிமன்ற தீர்ப்பின் படி இந்த இடம் பள்ளி வாசலுக்கு உரியது என்ற ஆவனம் இருந்தால் காண்பித்துவிட்டு மின் இணைப்பு துண்டிக்க வாருங்கள் எனக் கூறி னர். இதனை தொட ர்ந்து அதிகாரிகள் மின் இணைப்பை துண்டிக்கா மல் திரும்பிச் சென்றனர்.