districts

img

சிறப்பு நிலை ஊதியம் கேட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப். 14- சிறப்பு நிலை ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடலூர்  மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சி தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஊதியத்தை குறித்த  தேதியில் வழங்க வேண் டும். 144 பேர்பட்டியல் வழி  தேர்வு நிலை பெற்றவர்க ளுக்கு சிறப்பு நிலை ஊதி யம் வழங்க வேண்டும், சொசைட்டி நிலுவை ரூ.2.31  கோடி தொகையை கட்ட வேண்டும், தூய்மை  பணியாளருக்கு சம்பளத் தில் கட்டும் அபராத வட்டி  தொகைக்கு மாநகராட்சி பொறுப்பேற்க வேண்டும், 25 ஆண்டுகள் சிறப்பு  நிலை பணி முடித்தவர்க ளுக்கு தலா ரூ.2000 சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். ஜிபிஎப் கணக்கு சீட்டு, சம்பள சீட்டு, பணியாளர் அடையாள அட்டை வழங்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை விடு முறையை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் தலைவர் ப.அரசகுமரன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் நிறுவனத் தலைவர் ச.சிவராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.மனோகரன், மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.அரிகிருஷ்ணன், சங்கத்தின் துணைத் தலைவர் பாண்டுரங்கன், நிர்வாகிகள் நாகப்பன், சி.பக்கிரி, செய லாளர் த. செல்வராசு, துணை  செயலாளர் ஆனந்த், ரமணி  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.