கடலூர் புத்தக கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் அரங்கில் துளிர்மனம் பதிப்பகத்தின் “கல்வியும் செல்வமும்” என்ற நூலை கல்வியாளர் ஆயிஷா நடராஜன் வெளியிட கவிஞர் பால்கி பெற்றுக் கொண்டார். இதில் துளிர்மனம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆர்.தசரதன், நூலாசிரியர் ஆர்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.