districts

சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைக்க முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை

சிதம்பரம், டிச. 16- சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்ப தாவது: சிதம்பரம் வட்டத்தில் பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கொள்ளிடம் ஆறு, பால மான் வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலை கள் உள்ளன.  மழை-வெள்ளத்தின் போது மேட்டூர் தண்ணீரிலிருந்து வரும் முதலைகள் இந்த நீர் நிலை களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல்கி பெருகி வருகின்றன. இந்தப் பகுதியில் பிடிக்கப்படும் முதலை சிதம்பரம் அருகே உள்ள வக்ராமரி நீர் தேக்கத்தில் விடப்படு கிறது. இந்த முதலைகளும் மழை மற்றும் வெள்ளத்தின் போது நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறி வாய்க்கால் மற்றும் நீர் நிலைகளில் தஞ்சமடைகிறது. நீர்நிலைகளில் குளிக்க செல்லும் பொதுமக்கள், நீர்நிலைகளில் கரை யோரம் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை கடித்து தண்ணீ ருக்குள் இழுத்து சென்று விடு கின்றது. மேலும், கோடை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து உணவு தேடி முதலைகள் ஊருக்கு சென்று கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது.  தண்ணீரில் இருக்கும் முதலைகள் கரைகளில் படுத்துக் கொண்டு பொதுமக்களை விரட்டுவதும் உண்டு.  சிதம்பரம் அருகே உள்ள அகர நல்லூர், வேளக்குடி, பழைய நல்லூர், கடவாச்சேரி, வல்லம் படுகை, இளநாங்கூர், கண்டியா மேடு, நந்திமங்கலம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிதம்பரம் நகரத்தையொட்டி உள்ள 10க்கும் மேற்பட்ட நகர் பகுதியில் முதலைகள் நடமாட்டம் உள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட மனித உயிர் இழப்பு கள் ஏற்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு உடனடி யாக சிதம்பரம் வட்ட பகுதியில் முதலைப் பண்ணை அமைத்து நீர்நிலைகளில் உள்ள முதலை களை பிடித்து அதில் விட்டு மக்களை யும், கால்நடைகளையும் பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.