கடலூர், மார்ச் 22- சாலை அமைக்கும் பணி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அறிவித்த போரா ட்டம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. பண்ருட்டி வட்டம், திருத்துறையூர், சின்னப் பேட்டை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மயானத்துக்கு செல்ல மலட்டாற்றின் ஓரமாக தார் சாலையும், மயானத்தில் எரி கொட்டகையும் அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி வருகின்றனர். சின்னப்பேட்டை - திருத்துறை யூர், ஒறையூர் - கரும்பூர் சாலையில் மலட்டாற்றின் இடையே பாலம் அமைக்க தடையில்லா சான்று வழங்க வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது. இதைக் கண்டித்து, திருத்துறையூர், சின்னப்பேட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை (மார்ச் 23) மலட்டாறு மயானத்தில் சவக்குழி இறங்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பண்ருட்டி வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் சிவ.கார்த்திகேயன் தலை மையில் அமைதிப் பேச்சு வார்த்தை திங்களன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, வனச் சரக அலுவலர் அப்துல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆர்.லோகநாதன், எஸ்.கே.ஏழுமலை ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தையில் 4 மாதங்களில் சாலை அமைக்க அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரும், வன அலுவலரும் உறுதி அளித்த னர். இதையடுத்து, சவக்குழி இறங்கும் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.