சிதம்பரம், மார்ச் 28- போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா மலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக 205 பேர் தொகுப் பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மாத ஊதியம் ரூ 1,500இல் இருந்து தற்போது 5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்த ரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கடந்த 13ஆம் தேதி முதல் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துலிங்கம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளி யிட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடன டியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவமனை வாயி லில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிதம்பரம் - பிச்சாவரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை ஏஎஸ்பி ரகுபதி தலை மையில் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், காவல் துறையினர் அனைவரையும் கைது செய்தனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட தொகுப்பு ஊதிய ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துலிங்கத்தை யும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் தொகுப்பூதிய ஊழியர் கள் போராட்டத்திற்கு உறுதுணை யாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.