கடலூர், ஜூன் 7- கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். கடலூர் அடுத்த நெல் லிக்குப்பம் அருங்குணம் ஊராட்சி குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 7 மாணவிகள் கெடிலம் ஆற்றில் தடுப் பணையில் மூழ்கி பலியா னார்கள். இத்தகவலை அறிந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மருத்துவ மனைக்கு சென்று இறந்த வர்களின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களின் குடும் பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அவருடைய சொந்த நிதி ஆதாரத்தி லிருந்து தலா ரூ.25,000 வீதம் 7 பேர் குடும்பத்திற்கும் ரூ.1,75,000- வழங்கினார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:- இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் குறிப்பிட்ட அந்த இட த்தில் பள்ளம் எப்படி ஏற்பட்டது மேலும் அங்குள்ள மண்ணின் தன்மை என்ன என்பதெல் லாம் குறித்து ஆய்வின் முடிவில் தெரியவரும். இவ்வாறுஅமைச்சர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியம், கடலூர் மாந கராட்சி மேயர் சுந்தரிராஜா பலர் உடனிருந்தனர்.