ஓசூர், மார்ச் 19- ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்குற்றங் களைத் தடுக்க மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஓசூர் வனப்பகுதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துடன் இணைந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடுதல், மரங்களை வெட்டி வெளி மாநிலங்களுக்குக் கடத்துவது என பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. இதனைத் தடுக்க வனப்பகுதிகளிலும், மாநில எல்லை களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டு வனத்துறையினரால் கண்காணிக்கப் பட்டு வந்தாலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களை அதிகளவில் தடுக்க முடிய வில்லை. இதையடுத்து காவல்துறையில் மோப்ப நாய்களை பயன்படுத்துவது போன்று, ஓசூர் வனக்கோட்டத்திலும் மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக ஓசூர் மாநில எல்லை பகுதிகளில் வாகனங்களைச் சோதனை செய்வதில் மோப்ப நாய் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.