districts

img

பணியிட மாறுதல்களில் ஆளுங்கட்சியினர் தலையீடு ரத்து செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆவேசம்

ஈரோடு, ஜூன் 15- ஆளும் கட்சியினரின் தலையீட்டால் முறையற்ற பணியிட மாறுதல்கள் நடை பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி ஈரோட்டில் புத னன்று சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சம்மேளன துணை தலைவர் பொன்.பாரதி தலைமை தாங்கினார். இதில்,  சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணி யன், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க பொது  செயலாளர் வை.பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் ஈரோடு நகர செயலாளர் பி. சுந்தரராஜன் வாழ்த்துரையாற்றினர்.   முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள், ஆளுங்கட்சியினர் தலையீட்டினால்  போடப்பட்ட முறையற்ற பணியிட மாறுதல் களை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற  உத்தரவின்படி ஏபிசி பணியிட மாறுதல் களை அமல்படுத்த வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என  முழக்கங்களை எழுப்பினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர். முடிவில் ரவிச்சந்தி ரன் நன்றி கூறினார்.