districts

img

திட திரவக் கழிவு மேலாண்மை கட்டமைப்பை மாநில பேரூராட்சிகள் இணை ஆணையர் ஆய்வு

சின்னாளபட்டி, மே 14- திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சியில் நவீன முறை யில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு பூங்கா வையும் நிலக்கோட்டை பேரூராட்சியில் புதி தாக இயற்கை முறையில் கழிவுநீர் சுத்திக ரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட திரவக்  கழிவு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வடி கால் வசதிகளையும் அதற்காக அமைக்  கப்பட்ட பசுமையான வாழைக்கன்றுகளை யும் தமிழக பேரூராட்சிகள் இணை ஆணை யர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார். மேலும் இத்திட்டத்தை பார்வையிட்டு பேசிய பேரூராட்சிகள் இயக்குநர் செல்வ ராஜ், நிலக்கோட்டை, அம்மையநாயக்க னூர் பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டு செயல்  பாட்டில் உள்ள திடதிரவ கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்தி கரிப்பு மையங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இரண்டு பேரூராட்சிகளிலும் 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்ட போதும் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பேரூ ராட்சியில் செயல்பட்டு வரக்கூடிய மேலும் ஏழு இடங்களில் உள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம் மக்களுக்கு பயன்படும் வகை யில் செயல்படுத்த வேண்டும் என்று அதி காரிகளுக்கு அறிவுரை வழங்கினார். புதிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கேட்ட றிந்தார். இதில் அம்மையநாயக்கனூர் பேரூ ராட்சி தலைவர் எஸ்பி.செல்வராஜ், நிலக் கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், துணைத்தலைவர் எஸ்பி. முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி மற்றும் பேரூராட்சி மாவட்ட உதவி இயக்குநர்,  செயற்பொறியாளர், உதவி செயற்பொறி யாளர், அலுவலக பணியாளர்கள் உடனி ருந்தனர்.