districts

img

திண்டுக்கல்லில்  சதுரங்கப் போட்டிகள்  

திண்டுக்கல், ஜுன்.10 44 ஆவது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டிகள் மாமல்ல புரத்தில்  ஜுலை 28 முதல்  ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.கே.ஜி. ரோட்டரி ஹாலில் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் துவங்கின. திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் துவங்கி வைத்தார். துணைத்தலைவர் சண்முகம், நிர்வாகிகள் ராமலிங்கம், அப்துல்நாசர், நடராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒரு வீரர், ஒரு வீராங்கனை ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட தேர்ந்தெடுக்கப் படுவர். (நநி)