districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, டிச.10- சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூ தியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய மாக ரூ.7850 வழங்க வேண்டும், என வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடு தல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத் துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்ற ஓய் வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதி யமாக ரூ.7850 வழங்க வேண்டும். மருத் துவக்காப்பீட்டு திட்டத்தில் “காசில்லா மருத்துவம்” என்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாயன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பழனிசாமி தலைமை வகித் தார்.

மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள், பொருளாளர் சின்னசாமி, நிர்வாகி கள் எம்.கோபால், முனுசாமி, கே.புக ழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.குப்புசாமி, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட் டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இதில் ஏராள மான ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட னர்.