தருமபுரி, டிச.31- வெறிநாய் கடித்ததில் பெண் உட்பட 7 பேர் படுகாயம டைந்துள்ளனர். தெருநாய்களை கட்டுப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூர் கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தெருக்களில் சுற்றிதிரியும் வெறிநாய் அப் பகுதியை சேர்ந்த சுரேஷ் (30), திம்மக்கா (50), விக்னேஷ் (20), முருகன் (45), முனுசாமி (50), முனிராஜ் (50) கோவிந்த ராஜ் (35) உட்பட ஏழு பேரை கடித்தது. காயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமைனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர வீடுகளில் வளர்க்கப் படும் ஆடு, மாடுகளையும், குறிப்பாக கறவை மாடுகளை கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் வெறி நாய்களை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.