districts

img

“யார் அந்த சார்” அதிமுகவை தினறடிக்கும் போஸ்டர்

பொள்ளாச்சி, ஜன.10- அதிமுக ஆட்சியில் நடை பெற்ற குற்றங்களை பட்டிய லிட்டு  புகைப்படங்களுடன் பொள்ளாச்சி நகர் முழுவதும் திமுகவினர் ஒட்டிய போஸ் டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக யார் அந்த  சார்? என்ற வாசகம் அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதப் பொருளாக உள்ளது. இந்நிலையில், வியானன்று இரவு பொள்ளாச்சியின் முக்கிய நகர் பகுதிகளான பேருந்து நிலையம் நகராட்சி அலுவலகம் முன்பு, வாட்டர் டேங்க்  ரோடு, ராஜா மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவில் யார் அந்த சார் ? நான் தான் அந்த சார்! என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரங்கேறிய போது அவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த  சார் யார்? தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தில் லிக்கு அடிமை சேவகம் செய்த சார் யார் ?, பெண் எஸ் பி க்கு பாலியல் வன்முறை நடந்த போது அதை வேடிக்கை பார்த்த  சார் யார் ? போன்று அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக பல்வேறு போஸ்டர் கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு போஸ்டர் களிலும் யார் அந்த சார் ? இவர்தான் அந்த சார் ! என குறிப்பிட்ட  பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் எடப் பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோ ரின் புகைப்படங்கள் பகிரங்கமாக போஸ்டரில் அச்சடிக் கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.