districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வேலை கேட்டு ஆட்சியர்  அலுவலகம் முன் பெண் தர்ணா

வேலை கேட்டு ஆட்சியர்  அலுவலகம் முன் பெண் தர்ணா கோவை, ஜன.6- ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 10 ஆண்டுகள் கடந்தும்,  தற்போது வரை வேலை கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில், பெண் ஒருவர் தரையில அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற  பெண் ஆசிரியர் பயிற்சி முடித்து எம்ஏ, எம்எட் பட்டம்  பெற்று. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 10 ஆண்டுகள்  கடந்து விட்டதாகவும். ஆனால், தற்போது வரை தனக் கான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறி  கையில் பதாகையுடன் ஆட்சியரிடம் மனு அளித்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பதா கையை கையில் வைத்து திடீரென தரையில் அமர்ந்து  கண்ணீர் விட்டு அழுதபடி தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் பள்ளிக்  கல்வித் துறையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆனால், மிகக் குறைந்த அளவாக 3 ஆயிரம் காலிப் பணி யிடங்கள் மட்டுமே இருப்பதாக அரசு அறிவித்து உள்ளது.  மாநிலம் முழுவதும் 25,000க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்  தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்து அரசு வேலைக்காக காத்திருக்கக் கூடிய நிலையில் தமிழக அரசு மிகக் குறைந்த அளவிலான ஆசிரியர் பணி இடங்களை மட் டுமே அறிவித்து இருக்கிறது. தான் கர்ப்பிணியாக இருந்த  பொழுது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த சூழ லில் தற்போது தனது மகன் ஆறாம் வகுப்பில் படித்து  வருகிறான். தற்போது வரை ஆசிரியர் பணி இடத்திற் காக தொடர்ந்து படித்து வருவதாகவும் கூறியதுடன் நிய மனத் தேர்வு எழுதி ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும்  அதற்குரிய முடிவுகள் வரவில்லை என்றும் கண்ணீருடன்  தெரிவித்தார்.

43 முறை விண்ணப்பித்தும் உதவிகள் இல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா

43 முறை விண்ணப்பித்தும் உதவிகள் இல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா சேலம், ஜன.6- நலத்திட்ட உதவிகள் வேண்டி 43 முறை விண்ணப்பித் தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் ஏகாம்பரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் சத்யா. இவரது கணவர் ஜெகதீஷ்  வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக வும், தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதால் அரசு  நலத்திட்ட உதவிக்கு விண்ணப்பித்துள்ளார். 43 முறை  மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீடு,  மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கடையில் 35 கிலோ  அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்து சத்யா மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

இணையதளம் மூலம் கேழ்வரகு விற்பனை

இணையதளம் மூலம் கேழ்வரகு விற்பனை சேலம், ஜன.6- விவசாயிகள் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலை யங்களில் இணையதளம் மூலம் பதிவு செய்து தங்களது  கேழ்வரகினை விற்பனை செய்யலாம், என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயி கள் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் எளி தில் பதிவு செய்து கொண்டு கேழ்வரகு விற்பனை செய்ய  ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணை யத்தில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண்,  புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை  எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேஎம்எஸ் 2024-2025 ஆம் பருவத்திற்கு கேழ்வரகு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.4,290 ஆதார விலையாக நிர் ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்காணும் இணையதளம் மூலம் பதிவு செய்து விவசாயிகள், நுகர் பொருள் வாணிபக்கழக ஓமலூர் மற்றும் மேட்டூர் கிடங் கில் அமைக்கப்பட்டுள்ள நேரடி கேழ்வரகு கொள்முதல்  நிலையங்களில் விற்பனை செய்வதற்கு தேவையான பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் வருவாய் ஆவணங் களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலை பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி கேழ்வரகு  கொள்முதல் நிலையத்தின் பெயர், கேழ்வரகு விற்பனை  செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள்  அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது அலைபேசி எண் ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி  கேழ்வரகு கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளை வித்த கேழ்வரகினை விற்பனை செய்து பயன்பெற லாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது நாமக்கல், ஜன.6- கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலி பர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே  கணவனை இழந்த பெண் கூலி தொழில் செய்து தனது  இரண்டு மகள்களை படிக்க வைத்து வருகிறார். இவரது மூத்த மகள் 17 வயதானவர், இரண்டாவது மகள் பத்தாம்  வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25  ஆம் தேதியன்று வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற  மூத்த மகள் மாலை வீட்டுக்கு வரவில்லை. இதனால்,  அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப் படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்கள் வீட்டு அருகில் வசிக்கும் வேல்முரு கன் என்பவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  இந்த விசாரணையில், வேல்முருகன் 17 வயது  கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கவுந்தப்பாடியில் திருமணம் செய்து கொண்டு தங்கி இருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று மாண வியையும், அவரை கடத்தி திருமணம் செய்த வேல்முரு கனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை  மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் வேல்முருகன்  இளம்பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்தது  உறுதி செய்யப்பட்டதை அடுத்து போக்சோ சட்டத்தின்  கீழ் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

பாலியல் குற்றவாளியை அடையாளம் காட்டியதால் கொலை மிரட்டல்

சேலம், ஜன 6- சிறுமியை பாலியல் சீண்டால் செய்த குற்றவாளியை போலீசில் காட்டிக் கொடுத்ததால், கொலை  மிரட்டல் எழுந்த நிலையில், உயி ருக்கு பயந்து காவல் கண்காணிப் பாளரிடம் குடும்பத்தினர் தஞ்சம டைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாச்சலம் புதூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் கர்நா டகா மாநிலம் பகுதியில் கிணறு தோண்டும் பணி மற்றும் கல் உடைக் கும் பணி செய்து வருகின்றனர். இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்ற இளை ஞரும் பொக்லைன் வண்டி ஓட்டும்  பணிக்காக வந்துள்ளார். இந்நிலை யில், அந்த குடும்பத்தை சேர்ந்த 9  வயது சிறுமியை வெற்றிவேல் பாலி யல் சீண்டல் செய்ததாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம்  ஹன்னூர் காவல் நிலையம் குற்ற வழக்கு எண் 270 /2024 கீழ் வழக்கு  பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், காவல்துறையி னர் தேடுவதை அறிந்த குற்றவாளி வெற்றிவேல் தனது சொந்த ஊரான  தாரமங்கலத்திற்கு வந்தார். இதனை யறிந்து, கர்நாடக மாநில காவல்து றையினர் தாரமங்கலம் காவல் நிலை யத்திற்கு வந்து விசாரித்தனர் அப் பொழுது வெற்றிவேல் இருக்கும் இடத்தை இவர்கள் கூறியதால் அவர்  கைது செய்யப்பட்டு தற்பொழுது கர்நாடகா மாநில சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் காவல்துறையி னரிடம் தலைமறைவாக இருந்தவ ரை காட்டிக் கொடுத்த முன் விரோ தித்திற்காக வெற்றிவேல் தந்தை மற் றும் அவரது உறவினர்கள் பத்துக்கும்  மேற்பட்டோர், பாதிக்கப்பட்ட சம்பந் தப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி ஊருக்குள் நுழையக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப் படுகிறது  இது குறித்து தாரமங்கலம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தும் எந்த  ஒரு நடவடிக்கையும் எடுக்காத கார ணத்தினால் திங்கட்கிழமை பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் ஊருக் குள் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் புகார் மனு வழங்கி னர்.

குட்கா பறிமுதல்

குட்கா பறிமுதல் சேலம், ஜன.6 - சேலம் அருகே விபத்தில்  சிக்கிய சொகுசு காரில் மூட்டை மூட்டையாக தமிழக  அரசால் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள் சிக் கியது. இதில், வாகனத்தை ஓட்டி வந்த வடமாநில நபரை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  பெங்களூரில் இருந்து  சேலம் வழியாக கும்பகோ ணம் நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று மாசிநாயக்கன் பட்டி பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப் போது விபத்தில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் உடன் இருந் தவர் காரை நிகழ்விடத் திலேயே விட்டு விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் ராஜஸ்தான் மாநி லத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சுஜாராம் மாலி என்பவரை பிடித்து விபத்தில் சிக்கிய காரை சோதனை செய்தனர். அப்போது காரில் சுமார் 15 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் தமிழ்நாடு அர சால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப் பது தெரியவந்தது. இதைய டுத்து போதைப் பொருட் களை கடத்தி வந்த காரை  பறிமுதல் செய்த போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கண்பத்ராராம் என்ப வரை தேடி வருகின்றனர்.

மூவர் கொலைச் சம்பவம்: ஊருக்குள் பட்டா கேட்கும் விவசாய குடும்பங்கள் 

மூவர் கொலைச் சம்பவம்: ஊருக்குள் பட்டா கேட்கும் விவசாய குடும்பங்கள்  திருப்பூர், ஜன.6 - பொங்கலூர் ஒன்றியத்தில் விவசாய தோட்ட வீட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவா ளிகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில், அந்த கிராமத் தில் தோட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி கிரா மத்திற்குள் குடியிருப்பதற்கு பட்டா கோரியுள்ளனர்.  இது தொடர்பாக கண்டியன்கோயில் ஊராட்சி முன்னாள்  தலைவர் டி.கோபால் தலைமையில் கிராம மக்கள் திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனு  அளித்தனர். இதில், திருப்பூர் தெற்கு வட்டம், பொங்கலூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட கண்டியன்கோவில் கிராம ஊராட்சி, தாயம்பா ளையம் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு சமு தாயத்தைச் சேர்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறார்கள். இதில் 90 சதவீத பேர் விவசாய குடும் பத்தைச் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட 65 குடும்பங்கள் ஒரே  இடத்தில் வசித்து வந்தனர். பி.ஏ.பி. பாசன திட்டம் வந்த பிறகு  தரிசாக இருந்த நிலங்கள் விளைநிலங்களாக மாறின. குடியி ருக்கும் ஊரிலிருந்து தங்களுடைய நிலங்கள் ஓரிரு கிலோ  மீட்டர் தொலைவில் இருந்ததால் ஊருக்கு வந்து செல்வதில்,  விவசாய வேலைகளைச் சரிவர கவனிக்க இயலாத சூழ்நிலை  ஏற்பட்டது. எனவே ஊருக்குள் குடியிருந்த வீடுகளைக் காலி  செய்துவிட்டு தங்களது தோட்ட வீடுகளில் குடியேறி விட்டனர்.  அவர்கள் ஊருக்குள் குடியிருந்த வீடுகள் அவரவர் அனுப வத்தில் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடங்களுக்கு பட்டா இல்லை.  இந்த சூழ்நிலையில் இந்த கிராமத்தில் சமீபத்தில் நடந்த  மூவர் கொலை சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இத னால் இரவு நேரத்தில் தோட்டத்தில் தங்குவதற்கு அஞ்சுகின் றனர். ஏற்கனவே ஊருக்குள் இருக்கும் இடத்தில் வீடுகள் கட்டிச் சென்று விடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.  இது தொடர்பாக மேற்படி கிராம மக்கள் காலியிடத்திற் பட்டா கேட்டு திருப்பூர் தெற்கு வட்டாட்சியரிடம் விண்ணப்பித் துள்ளனர். எனவே தாயம்பாளையம் விவசாயிகள், மக்களின்  உணர்வுகளையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஊருக்குள் உள்ள காலியிடங்களுக்கு பட்டா வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு சட்டம் கோரி நீதிமன்றம் புறக்கணிப்பு

திருப்பூர், ஜன.6 - தமிழ்நாட்டில் வழக்கறிஞர் பாது காப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலி யுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தை நடத்தினர். வழக்கறிஞர்கள் கூட்டுப் போராட்ட குழு அறிவிப்பின் அடிப்படையில் திங்க ளன்று இந்தப் போராட்டம் நடைபெற் றது.  திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறி ஞர்கள் பணியை புறக்கணித்து போராட் டத்தில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பணி யாற்றும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்போராட் டத்தில் பங்கேற்றனர்.

ரூ. 24.09.லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

ரூ. 24.09.லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் அவிநாசி , ஜன.6- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  நடைபெற்ற  ஏலத்தில் 92 விவசாயிகள் கலந்து கொண்டு 873 மூட்டைகள்  நிலக்கடலையை கொண்டுவந்து இருந்தனர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் கலந்து கொண்டு  மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல்  ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.7,125 வரையிலும், இரண் டாம் ரக நிலக்கடலை ரூ.6,210 முதல் ரூ.6,636 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.5,500 முதல் ரூ.6,026 ஏலம் போனது. மொத்தம்  ரூ.24.09 இலட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது.

பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி  சுற்றுலாத் தலமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி  சுற்றுலாத் தலமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் சேலம், ஜன 06- சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி சுற் றுலாத் தளமாக்க வேண்டும் எனக் கோரி சேலம் கோட்டை மைதா னத்தில் திங்களன்று தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பனமரத்துப் பட்டி ஏரியை தூர்வாரி சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற  ரூ.98 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவிப்பு வெளியானது.  ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே உடனடியாக பனமரத்துப்பட்டி ஏறிய தூர்வாரி சுற் றுலாத்தலமாக மாற்ற வேண்டும். பனமரத்துப்பட்டி பேரூ ராட்சி 9 ஆவது வார்டு பகுதியில் உள்ள குவாலியர் ஏரி  ஓடை, ராஜ வாய்க்கால் மற்றும் வண்டிப்பாதை ஆக்கிரமிப் புக்கு உடந்தையாக உள்ள வட்டாட்சியர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். பேரூராட்சி நிர்வாகம் குவாலியர் ஏரி மற் றும் வண்டிப்பாதையை கையகப்படுத்த தீர்மானம் கொண்டு  வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். முன்ன தாக தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்க நிர்வாகி  பொன் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்களின் நெருக்கடி கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல், ஜன.6- மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்க ளின் நெருக்கடியால், மனம் உடைந்த பெண் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அருகே உள்ள குப்பாண்டாபாளை யம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர்  பகுதியைச் சேர்ந்த கட்டிடக் கூலி தொழி லாளி கோபி. இவரது மனைவி தனக் கொடி, இவர் விவசாயக் கூலி வேலைக்கு சென்று வருகிறார். தனக் கொடி தனது குடும்பச் செலவுக்கு போதிய வருமானம் இல்லாததால், மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங் களான கிராம விடியல், வனிதா நிதி  நிறுவனம், ஐபிஎல்எஸ் மற்றும் அரைஸ்  உள்ளிட்ட நான்கு குழுக்களில் சுமார் 2  லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று வார தவணையாக செலுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக போதிய வருமானம் இல்லாததால், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.  இந்நிலையில், ஞாயிறன்று காலை யில் தனக்கொடி வீட்டிற்கு வந்த மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன ஊழி யர்கள் இருவர், கட்டாயம் பணத்தை செலுத்தியே ஆக வேண்டும் என வீட் டிற்கு முன் நின்று தகாத ஆபாச வார்த் தைகளில் பேசியதாக தெரிகிறது. இத னால் மனமுடைந்த தனக்கொடி ஞாயி றன்று மாலை திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று கதவை சாத்தியவர், நீண்ட நேரம் கடந்தும் கதவை திறக்க வில்லை. இரவு வீட்டிற்கு வந்த அவ ருடை கணவர் கோபி கதவைத் தட்டி  பார்த்தும் தனக்கொடி, கதவை திறக் காத நிலையில், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது தனக்கொடி தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  இது குறித்து அவரது கணவர் கோபி குமாரபாளையம் காவல்துறையி னரிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் வந்த குமாரபாளையம் போலீசார் தனக் கொடி உடலை கைப்பற்றி உடனடி யாக, குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பு  குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். குமாரபாளையம் பகுதியில் தொடர்ந்து  மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்களின் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியதின் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் ஆறு நபர்கள் தற் கொலை செய்து கொண்டது. குமார பாளையம் பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி பேருந்து மோதி விபத்து

கோவை, ஜன.6- மேட்டுப்பாளையம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் லேசான காயமடைந்தனர்.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கோட்டை பிரிவு பகுதியில் சாய் வித்யா நிகேதன் என்னும் தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது. திங்களன்று காலை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மாண வர்களை பள்ளி பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருக்கும் போது, வீர பாண்டி பிரிவு அருகில் திடீரென ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலை யின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி  பேருந்திலிருந்த 5 க்கும் மேற்பட்ட மாணவர் கள் லேசான காயம் அடைந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், மாணவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.