நாமக்கல், டிச.22- குமாரபாளையத்தில் இயங்கி வந்த பல்வேறு நாடக மன்றங்களைச் சேர்ந்த வர்கள் ஞாயிறன்று தமுஎகச-வில் இணைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் அருகே உள்ள பள்ளிக்காடு பகுதி யில் ஸ்ரீகண்ணப்ப நாயனார் தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் தட்டாங்குட்டை ஊராட்சி பகுதி அமைப்புக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எம். ஆர்.கொய்யாமணி தலைமை வகித் தார். அமைப்பாளர் ஆர்.தியாகராஜன் வரவேற்றார். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப் புரையாற்றினார். தமுஎகச மாவட்டச் செயலாளர் சேகரன், மாவட்டத் தலை வர் காந்தி சரவணன், வெப்படை கிளைத் தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குமார பாளையத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்ரீவிநாயகா கலா மன்றம், செங்கவேல் கலா மன்றம், ஸ்ரீராஜகண பதி சர்வசக்தி மாரியம்மன் நாடக மன் றம், ஸ்ரீகண்ணப்பர் கலா மன்றம், ஸ்ரீஎல்லை மாரியம்மன் நாடக மன்றம், ஸ்ரீமாரியம்மன் நாடக மன்றம் உள் ளிட்ட ஆறு மன்றங்களைச் சேர்ந்தவர் கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சால்வை அணி வித்து வரவேற்றார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.