வியாபாரிகளுக்கு வைப்புத்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தல்
ஈரோடு, ஜன.1- கடைகளை காலி செய்த கனி மார்க்கெட் வியாபாரிகள் செலுத்திய வைப்புத்தொகையை மாநகராட்சி நிர்வாகம் உட னடியாக வழங்க வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் சு.நாகரத்தினம் தலை மையில், மாமன்ற கூட்டரங்கில் புதனன்று நடைபெற்றது. துணை மேயர் வி.செல்வராஜ், ஆணையர் அர்பித் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ் துளைக் கிணறுகள் பெரும்பாலானவை பழுதடைந்து காணப் படுகின்றன. இதனால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். 48 ஆவது வார்டு பகுதியில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும். குறிப்பிட்ட சில வார்டுகளில், ஊராட்சிக்கோட்டை தனி குடிநீர் திட்டத்தின் மூலம் இதுவரை முறையாக குடிநீர் விநி யோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக் கப்பட்டு வருகின்றனர். எனவே, அனைத்து வார்டுகளிலும் குடி நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல் வேறு பகுதிகளில் உடைந்து காணப்படும் புதை சாக்கடை மூடி களுக்கு மாற்றாக, புதிய மூடிகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களால் ஆடு, கோழிகள் பலியா வது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். 60 வார்டுகளிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதற்கு மாற்றாக புதிய விளக்குகளை பொருத்த வேண்டும். மாநக ராட்சியில் வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதன் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். கட்டடத்தின் சதுரடிக்கு ஏற்ப வரி நிர்ணயம் செய்ய வேண்டும். கனி மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த 68 ஜவுளி வியாபாரிகள் போதிய வியாபாரம் இல் லாததால் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் அந்த வியா பாரிகள் பல மாதங்களுக்கு முன்பே கடையை காலி செய்து விட்டனர். எனவே, அவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும், என்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊராட்சிக்கோட்டை தனி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படாத பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டுள் ளது. சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற நட வடிக்கை எடுக்கப்படும். தெருவிளக்குகள் குறித்த புகார்க ளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனடி யாக பழுது நீக்கப்பட்டும், புதிய விளக்குகள் பொருத் தப்பட்டும் வருகிறது. வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் இருந்து நெகிழிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட்டு அவை சாலை அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் குப்பை கொட்டு வது 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது, என்றனர்.
கேரளாவிலிருந்து கோழிகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
உதகை, ஜன.1- கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவுவ தால், அங்கிருந்து கோழிகள் ஏற்றி வரும் வாகனங்கள் நீலகிரிக்குள் நுழைய மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தடை விதித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி மாவட்ட எல்லை யில் உள்ள கேரளம் மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, கால்நடை பரா மரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேர ளம் மாநிலத்திலிருந்து கோழிகள், முட்டை கள், கோழி எச்சங்கள் மற்றும் கோழி தீவனங் கள் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றி வரு வதை தீவிமாக கண்காணிக்க, கேரளம் எல்லையோரம் உள்ள 7 சோதனை தடுப்புச் சாவடிகள், கர்நாடகா மாநில எல்லையோரம் ஒரு சோதனை தடுப்புச்சாவடி ஆகிய 8 சோதனை தடுப்புச்சாவடிகளில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பரா மரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் போலீசார், வனத்துறை மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. பறவைகளின் தலை மற்றும் கொண்டை யில் வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவு தல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக் குழலில் அதிக சளி, உள்ளுறுப்பு மற்றும் கால்களின் மீது ரத்தக்கசிவு ஆகியவை பறவைக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள். இந்த நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற-இறந்த கோழிகளை கையாளுவோருக்கும் இந்த நோய் சுவாசக் காற்று மூலம் பரவக்கூடும். பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை யால் மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும். கேரளம் மாநிலத்தில் இருந்து கோழி கள், முட்டைகள், கோழி எச்சம் மற்றும் கோழி தீவனங்களை வாகனங்களில் ஏற்றி வருவது மறு உத்தரவு வரும்வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுப்பாலினத்தோர் மறியல்
நாமக்கல், ஜன.1- ராசிபுரம் அருகே வீடுகளை விரைவாக கட்டி தர வேண்டும் என்று கூறி மாற்றுப்பாலினத்தவர் திடீர் மறி யலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆயி பாளையம் கோப்பம்பட்டி ஊரட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மாற்றுப்பாலினத்தவர் களான 6 திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர 9 மாதம் முன்பு அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், 9 மாதமாகியும் 7 அடி உயரத்திற்கு மட்டுமே சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாகவும், முழு மையாக வீடு கட்டாமல் இழுத்தப்படிப்பதாக கூறப்படு கிறது. இதனால், ஆவேசமடைந்த 6 திருநங்கைகளும் ஒப்பந்ததாரரை கண்டித்து ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வியாழனன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் கீதாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஜன வரி மாத இறுதிக்குள் வீட்டை கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு தற்கா லிகமாக திருநங்கைகளும் கலைந்தனர்.
பேருந்து நிலையத்திற்குள் வராத பேருந்துகளால் பயணிகள் அவதி
உடுமலை, ஜன.1- மடத்துக்குளம் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் வராமல் தேசிய நெடுச்சாலையில் நின்று செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகி றார்கள். மடத்துக்குளம் தாலூகா தலைமை பேருந்து நிலை யம் பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுச்சாலை யில் பல லட்சம் மதிப்பில் வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் கட்டப் பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் உள்ளே ரயில் நிலையம் உள்ள நிலையில் கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் உள்ளே வந்து செல் கிறது. நகர பேருந்துகள் பேருந்து நிலைய நுழைவாயி லாக இருக்கும் தேசிய நெடுச்சாலை பகுதியில் நின்று செல்கிறது. நகர பேருந்துகள் உள்ளே வராமல் வெளியே நின்று செல்வதால் பயணிகள் சாலையை கடந்து செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகி றது. எந்த நேரத்தில் பேருந்துகள் வருகிறது என்ற குழப்பங்களும் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மடத்துக் குளம் பேருந்து நிலையம் திண்டுக்கல் மாவட்ட எல்லை யில் இருப்பதால் எப்பொழும் பழனி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல அதிக பயணிகள் வருகிறார்கள். மேலும் இங்கு தான் ரயில் நிலையம் உள்ளது. நகர பேருந்துகள் எதுவும் உள்ளே வராமல் தேசிய நெடுச்சாலையில் நின்று செல்வதால் சாலையை கடந்து பேருந்துக்கு வரும் போது விபத்து கள் எற்பட்டு வருகிறது. பேருந்துகள் உள்ளே வராமல் செல்வதால் தனியார் வாகனங்கள் பேருந்து நிலை யத்தை ஆக்கிரப்பு செய்துள்ளார்கள். எனவே அனைத்து பேருந்துகளும் உள்ளே வந்து செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
பகுதி நேர நூலகத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
உதகை, ஜன.1- தேவாலா பகுதியில் செயல்பட்டு வரும் பகுதி நேர நூலகத்தை, முழு நேர நூலகமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தேவாலா பகுதியில் கிளை நூலகம் பகுதி நேர நூலகமாக செயல்பட்டு வருகிறது. நூலகத்தை ஒட்டி தேவாலா நகர சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு பல் வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள், கர்ப்பிணி கள் தினசரி வந்து செல்கின்றனர். குழந்தை களுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வரும், நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரத்தில் பயன்பெறும் வகையில் இந்த நூலகத்தை முழுநேர நூலகமாக திறந்து செயல்ப டுத்த வேண்டும் என பொதுமக்கள் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த நூலகத் தில் தற்போது 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவ, மாணவிகள் பல ரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை முழுநேர நூலகமாக திறந்து செயல்படுத்தினால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவோர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பயன் பெறுவார்கள். எனவே, நூலகத்துறையினர் உரிய நட வடிக்கை எடுத்து முழு நேர நூலகமாக செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
உதகை, ஜன.1- கூடலூர் அருகே விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள வடவயல் பகு தியை சேர்ந்தவர் குட்டன் (எ) குட்டி கிருஷ்ணன் (48). விவசாயி யான இவருக்கு அஞ்சு (44) என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில், ஒரு மகளுக்கு திருமணமாகி தனி யாக வசித்து வருகிறார். மற்ற 2 குழந்தைகள் வெளியூரில் படித்து வருகின்றனர். குட்டி கிருஷ்ணன், மனைவியுடன் தனி யாக வசித்து வந்தார். இந்நிலையில், செவ்வாயன்று இவ ரது மனைவி, அருகிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றி ருந்தார். தொடர்ந்து, புதனன்று உறவினர் ஒருவர், குட்டி கிருஷ்ணணின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர் போனை எடுக்காததால் உறவினர், நேரடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இத னால் சந்தேகமடைந்த உறவினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குட்டி கிருஷ்ணன் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்டி கிருஷ்ணனின் தந்தை இறந்து 12 நாட்களே ஆகியுள்ள நிலையில், குட்டி கிருஷ்ண னும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.