districts

img

கரும்புகளை முழுமையாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அடுத்துள்ள சம யசங்கிலி, கலியனூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 200 ஏக்கர் பரப் பளவில் தைப்பொங்கல் கரும்பு கள் வருடம் தோறும் பயிரிடுவது  வழக்கம். காவிரி கரையோரப்பகுதி களை ஒட்டி விவசாயிகள் கரும்பு களை பயிரிடுவர். அதேபோல ஈரோடு மாவட்டத்தின் காவிரி  கரையோர எல்லை பகுதிகளிலும்  கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கரும்புகள் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பாக பயிரிடப்பட்டது.  தற்போது கரும்புகள் முழுமை யாக வளர்ச்சி அடைந்துள்ள நிலை யில், இன்னும் ஒரு சில நாட்களில்  கரும்பு அறுவடை செய்யும் பணி கள் துவங்க உள்ளது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வருடம்  தோறும் வழங்கப்படும் பொங்கல்  பரிசுத் தொகுப்பில் சமய சங்கிலி கிராமத்தில் விளைவிக்கப்படும் கரும்புகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொள்முதல் செய்து  பல்வேறு பகுதிகளுக்கும் உள்ள  ரேஷன் கடைகளுக்கு அனுப்பு வது வழக்கம். அதேபோல வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங் களை சேர்ந்த விவசாயிகளும் கரும்புகளை கொள்முதல் செய்வ தற்கு சமய சங்கிலி கிராமத்திற்கு வருகை தருவது வழக்கம். அதன் அடிப்படையில் கரும்பு களை அறுவடை செய்வதற்கான ஆயத்தப்பணிகள் துவங்கிள்ளது.இதன் முதல் கட்டமாக வளைந் திருக்கும் கரும்புகளை நிலை  நிறுத்தி கட்டுவது, கரும்புகளை சூழ்ந்துள்ள சோகைகளை அகற் றுவது, மிகக் குறைந்த உயரத்தில் போதிய ஊட்டச்சத்துடன் இல் லாத கரும்புகளை தரம் பிரித்து களை எடுப்பது போன்ற பணிக ளில் விவசாயிகளும், விவசாய  தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ள னர்.

இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் கூறும் பொழுது, 2024 ஆம் ஆண்டை காட்டிலும், 2025 ஆம் ஆண்டு கரும்பு விவசாயம் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டி கையின் போது குடும்ப அட்டை தாரர்களுக்கு கரும்புகளை கொள் முதல் செய்வதில் அதிகாரிகள் பல் வேறு குழப்பங்களை ஏற்படுத்துவ தாலும், பரவலாக கரும்புகளை கொள்முதல் செய்யாமல் ஒரு சில  விவசாய காட்டில் மட்டுமே அதி காரிகள் கரும்புகளை கொள் முதல் செய்து செல்கின்றனர். கரும்பு விற்பனை நடைபெறுமா? இல்லையா? மேலும் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் படி எங்கள் கிராமத்தில் விளையும் கரும்புகள் இல்லை. நாங்கள் விளைவித்த கரும்புகளை நிரா கரித்து விடுகின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் செலவிட்டு கரும்புகளை பயிரிட்டுள்ள நாங் கள் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு  விற்பனை நடைபெறுமா இல்லையா என்று தவிப்புடன் இருக்க வேண்டிய நிலை இருக் கிறது. இந்த ஆண்டு பெரும் பாலானோர் கரும்புகளை பயிரிட வில்லை. கடுமையான பொருளா தார சூழ்நிலையிலும் தமிழக அரசை நம்பி இந்த ஆண்டு கரும்பு களை பயிரிட்டுள்ளோம். முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்  கரும்பு பயிரிட்ட நாள் முதலே  ஊட்டச்சத்து குறைபாடு, பூச்சிகள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தான் கரும்புகளை பயிரிட்டு தற் பொழுது அறுவடைக்கு தயார் செய்து வருகிறோம். எனவே எங் கள் கிராமத்தில் உள்ள கரும்பு களை தமிழக அரசு முழுமையாக  கொள்முதல் செய்ய வேண்டும்.  அதேபோல வியாபாரிகளும் தற் போது தான் கரும்புகளை பார்ப்ப தற்காக ஒவ்வொருவராக தற் போது வந்து கொண்டுள்ளதாக தெரிவித்தனர். - எம்.பிரபாகரன்