கோவை, ஜன.1– மயிலம்பாறை பகுதியில் பல ஆண்டுகளாக மின்சார வாரி யம் மின் இணைப்பு வழங்க மறுத்து வருவதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் திருமலையம் பாளையம் பகுதியில் உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில் வளர்ச்சியில் சிகரம் தொட்டு ஜொலிக்கும் கோவை மாவட்டத்தின் மதுக்கரை வட்டம், திருமலையம் பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட மயிலம்பாறை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகின்றனர். இப்பகுதி தீர்வை ஏற்ப டாத தரிசு நிலம் என்றும், அமைவிடச் சான்று இல்லை என்றும் கூறி மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்க மறுத்து வரு வதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் திருமலையம் பாளை யம் பகுதியில் புதனன்று தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக வட்டாட்சியர் முதல் ஆட்சியர் வரை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மின் சாரம் இல்லாததால் மாலை நேரங்களில் குழந்தைகள் படிக்க முடியாமலும், விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் அச்சத்து டன் வாழ வேண்டிய சூழல் உள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து, அதிகாரிகள் இன்னும் 10 நாட்களில் மின் இணைப்பு வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட் டது. எனினும், குறிப்பிட்ட காலத்திற்குள் மின்சாரம் வழங்கப் படாவிட்டால் மீண்டும் பெரிய அளவிலான போராட்டம் வெடிக்கும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.
