அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், டிச.27- தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டும், என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும். சாலைப் பணியாளர் களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங் கத்தின் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டக் கிளை சார்பில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் பார்த்திபன், சிவக் குமார், கல்பனாதத், கனகராஜ், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங் கத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், தலைவர் திரு வேரங்கன், பொருளாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று சேலம் ஐடிஐ முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஸ்ரீபதி, முரு கப்பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டக்கிளை சார்பில், 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் ராமன், வட்டக் கிளைத் தலைவர் கருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று உடுமலை வட்டத்தில் 20 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி யன், துணைத்தலைவர் புஷ்பவல்லி, இணைச்செயலா ளர் வைரமுத்து, வட்டக்கிளைச் செயலாளர் வெங்கிடு சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநா தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, மாவட்ட நிர்வாகிகள் குணசேகரன், பெ.மகேஸ் வரி, மாணிக்கம், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் சி.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாசனத்திற்கு நீர் திறப்பு வெளிப்படையாக நடக்க வேண்டும்!
ஈரோடு, டிச.27- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளில் மானிய வட்டி கடனை ரூ.3 லட்சத் தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளிப் படையாக நடக்க வேண்டும் என விவ சாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியு றுத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் வியாழனன்று மாதாந் திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியா ழனன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இக்கூட் டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசுகையில், மேட்டூர் வலது கரை பாச னத்திற்கு கடந்த முறையே கடை மடைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடைமடை வரை சுத்தம் செய்து, தூர்வாரி தொடர்ந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் அறுவடை சமயத்தில் இயந்திரங்கள் மானிய விலையில் அளிக்க வேண்டும். கீழ்பவானி பாசன வாய்க்காலில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் மூலம் செடி, கொடி களை அகற்ற வேண்டும். நெல்லுக்கு முறையான விலை நிர்ணயம் இல்லை. கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறி விப்பினை அரசு விரைந்து செயல்ப டுத்த வேண்டும். கீழ்பவானி பாசனத்தில் 2 ஆம் மண்டலத்திற்கு புஞ்சை சாகு படிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அப் போது, முதல் மண்டலத்தில் நனையாத பகுதிகளை கண்டறிந்து சிறப்பு நனைப் பாக தண்ணீர் திறக்க வேண்டும். காலிங் கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு தொடர் பாக வெளிப்படையாக நடக்க வேண் டும், என்றனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், பவானி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 5 இடங்களை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆம் மண் டல பாசனத்திற்கு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க அர சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் மேட்டூர் வலது கரை பகுதியில் கடை மடை பகுதியில் தூர்வாரப்படும், என்ற னர்.
அண்ணாமலையின் பிற்போக்கான நடவடிக்கை
இடதுசாரி கட்சிகள் விமர்சனம்
இடதுசாரி கட்சிகள் விமர்சனம் கோவை, டிச.27- ஊடகங்களின் பேசுபொருளாக தான் இருக்க வேண்டும் என்பதற்காக, பாஜக தலைவர் அண்ணாமலை செருப்பை அணிய மறுப்பது, சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொள்வது என பிற்போக்குத்தன மான வடிவத்தை கையில் எடுத்திருப்பதாக இடதுசாரி கட்சிகள் விமர்சித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் திருப்பதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக்குழு அலு வலகத்தில் வெள்ளியன்று இடதுசாரி கட்சி களின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல், எம்.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்-எல்) லிபரேசன் கட்சியின் சார்பில் பெரோஸ்கான், எஸ்.நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத் திய அமித்ஷாவை ராஜினாமா செய்யக் கோரி இடது கட்சிகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், இடது சாரி கட்சிகளை சேர்ந்த ஊழியர்கள் பெருந் திரளானோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல் சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற கொடூர பாலி யல் வன்முறைக்கு எதிராக தமிழக மக்களே ஒன்று திரண்டு நிற்கிறார்கள். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். எப்பாடு பட்டாவது பத்திரிகை களில் சமூக ஊடகங்களில் பேசும் பொரு ளாக வேண்டும் என்பதற்காக மிகவும் பிற் போக்குத்தனமாக சாட்டை அடிப்பது, செருப்பு அணிய மறுப்பது என்கிற வடி வத்தை கையில் எடுத்திருக்கிறார். மணிப்பூர் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் நடை பெற்ற எண்ணற்ற பாலியல் வன்கொடுமைக ளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாத அண்ணாமலையின் இந்த நாடகத்தை இடதுசாரி இயக்கங்கள் வன்மையாக கண் டிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
21 ஆயிரம் விவசாயிகள் காத்திருக்கின்றனர்! அமராவதி சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தல்
திருப்பூர், டிச.27- அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பி 21 ஆயிரம் விவசாயி கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். எனவே இந்த ஆலையை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ள னர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர் கூட்டம், ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வெள்ளியன்று நடை பெற்றது. இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி பால தண்டபாணி கூறுகையில், அமராவதி சர்க்கரை ஆலை ரூ.80 கோடியில் புனர மைப்பு நிதி மாநில அரசிடம் கேட்கப்பட் டது. இந்த பொதுத்துறை சர்க்கரை ஆலையை நம்பி, பதிவு செய்த 21 ஆயிரம் கரும்பு விவசாயிகள் காத்திருக் கின்றனர். இன்றைக்கு ஒரு லட்சம் டன் கரும்பு விளைந்துள்ளது. அரசின் தவ றான கொள்கையாலோ அல்லது நிதி பற்றாக்குறையாலோ இந்த ஆலை முழுமையாக செயல்படுவதில்லை. எனவே அமராவதி சர்க்கரை ஆலையை முழுவீச்சில் நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி எம்.எம்.வீரப்பன் பேசுகையில், மடத்துக்குளம் பகுதியில் நெல் பயி ரிட்ட விவசாயிகள் போதிய விளைச் சல் இன்றி, பயிர் கருகி பாதிக்கப்பட் டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய் கின்றனர். பயிர் கருகியதற்கு கார ணம், விதையா? மருந்தா? பருவமழை மாற்றமா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். 6 இன்ச் சுக்கு வளர வேண்டிய நெற்பயிர், 3 இன்ச் மட்டுமே வளர்ந்துள்ளது. விவசாயிக ளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தர வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.குமார் பேசுகை யில், மக்காச்சோளம் அறுவடை நேரம் இது. ஆனால், உரிய விலை கிடைக்கா மல் வியாபாரிகள் சிண்டிகேட் அமைக் கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு விலை கிடைக்க முடியாத சூழல் ஏற் பட்டுள்ளது. கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளது. துங்காவி, வேட பட்டி, காரத்தொழுவு, பாப்பாங்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு உள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இத்துடன் விவசாயிகள் பலர் பேசு கையில், உரம் வாங்க சென்றால், இணை உரம் வாங்கச் சொல்லி நிர்பந்திக்கிறார் கள். அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வது, கடைக்காரர்களுக்கு முன்கூட்டியே எப்படி தெரிகிறது? உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். இதன் அருகே அமராவதி ராஜ வாய்க் காலில் கழிவுகள் கலக்கிறது. இந்த வாய்க்கால் நஞ்சியம்பாளையம், சங்க ராண்டாம்பாளையம் உட்பட 3 ஊராட்சி களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வரு கிறது. இது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுத்து, பொதுமக்களின் குடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், உப் பாறு அணைக்கு வரும் ஜன.19 ஆம் தேதி முதல் தண்ணீர் விட அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. உத்தரவு கிடைக்கப்பெற்றதும், திறக்கப்படும், என்றனர்.