districts

img

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுவராஷ்யங்கள்

அறந்தாங்கி நகராட்சி 24 ஆவது வார்டில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியை கந்தர்வகோட்டை எம்.எல்ஏ எம்.சின்னதுரை பார்வையிட்டார். 

 ♦ ♦ ♦

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ரோவர் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

 ♦ ♦ ♦

பேராவூரணி சாலை புனித வளன் தொடக்கப்பள்ளி வாக்குசாவடியில் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தனது வாக்கை செலுத்தினார்.

 ♦ ♦ ♦ 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் குரும்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.

 ♦ ♦ ♦

பெரம்பலூர் நகராட்சி 16 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் எ.கலையரசி துறையூர் ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை அளித்தார்.

 ♦ ♦ ♦

திருச்சி துவாக்குடி நகராட்சி 18 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரமிளா செழியன் துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

 ♦ ♦ ♦

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஸ்வரி துவாக்குடிமலை ஊராட்சிமன்ற நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

 ♦ ♦ ♦

திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சி 7 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நித்யா பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

 ♦ ♦ ♦

திருச்சி மாநகராட்சி 35 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சுரேஷ் 34 ஆவது வார்டு பகுதியில் உள்ள சர்வைட் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

 ♦ ♦ ♦  

திருச்சி மாநகராட்சி 47 ஆவது வார்டில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.வெற்றிசெல்வம் 59 ஆவது வார்டு செங்குளம் காலனி பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

 ♦ ♦ ♦

சிபிஎம் வேட்பாளர்கள் வாக்களிப்பு

கரூர், பிப்.19 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூர் மாநகராட்சி 41  ஆவது வார்டில் போட்டியிடும் எம்.தண்டபாணி, புகழூர் நகராட்சி  22 ஆவது வார்டில் போட்டியிடும் இந்துமதி அரவிந்தன், அரவக்குறிச்சி பேரூராட்சி  1 ஆவது வார்டில் போட்டியிடும் கே.வி.கணேசன், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் 10 ஆவது வார்டில் போட்டியிடும் தேவி நாகராஜன், நங்கவரம் பேரூ ராட்சி 9 ஆவது வார்டில் போட்டியிடும் சித்தராசு ஆகியோர் அந்தந்த வார்டு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தங்களது  வாக்குகளை செலுத்தினர்.

 ♦ ♦ ♦

தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பேரூராட்சி 1 ஆவது வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக, அரசு மேல்நிலைப்பள்ளியில் 90 வயதான மூதாட்டி இராமு சக்கர நாற்காலியில் உதவியாளருடன் வந்து வாக்களித்தார். இவர் தனது ஜனநாயக கடமையை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.

 ♦ ♦ ♦

அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 15 வாக்குச்சாவடியில் 39 பூத்துகள் அமைக்கப்பட்டன. இதில் 27 இடங்களுக்கு 128 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அறந்தாங்கி சி.கே.ஆர்.சி. பள்ளி வாக்குசாவடியில் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்த மக்கள். 

 ♦ ♦ ♦

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் த.பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 ♦ ♦ ♦