கோவையில் யுனைட் (UNITE) ஐடி எம்ப்ளாயீஸ் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யுனைட் மாநில பொதுச் செயலாளர் அழகு நம்பி வெல்கின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து IT&ITES நிறுவனங்களில் இந்திய தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் கடந்த மாதம் சட்ட விரோதமாக மூடப்பட்ட focus Edumatics Private limited போராட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பண பலன்கள் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் யுனைட் அமைப்பின் கோவை மாவட்ட தலைவராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக விக்னேஷ், பொருளாளராக கேசவன் உள்ளிட்ட 18 பேர் கொண்ட மாவட்ட குழு அமைக்கப்பட்டது.