ஈரோடு, ஜன.19- சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் ஈரோடு மாவட்ட நிர் வாகி மறைந்த பிஷப் டி.விஜயகுமாரின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட உதவித்தலைவராக 10 ஆண்டுகாலம் பணியாற்றி மறைந்த பிஷப் டி.விஜயகுமாரின் படத்திறப்பு, நினைவஞ்சலி கூட்டம், சனியன்று நடைபெற்றது. ஈரோடு மனாருல் ஹுதா மஸ்ஜித் மற்றும் மதரஸா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே.எஸ். இஸாரத்தலி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாநில உதவித்தலைவர் ப.மாரிமுத்து வாசித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, காசிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.துரைராஜ், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஹாத் திம் தாய், மாவட்ட உதவித்தலைவர் என்.முகமது ஹனிபா மற்றும் ஆயர்கள் டி.ஜான் சாமுவேல், சிஸ்வா கே.ஜேம்ஸ், ஜான் விஸ்வநாதன், ஜான் பாஸ்கர், வி.ஜான் விக்டர் சாம் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். இதில் பிஷப் டி.விஜய குமாரின் குடும்பத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.