districts

img

‘சிந்துவெளி பண்பாடு அறிதல் அரங்கம்’

கோவை, ஜன.19- கோவை, வெள்ளலூரில் ‘சிந்து வெளி பண்பாடு அறிதல் அரங்கம்’ நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு முற்போக்கு  எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தின் வெள்ளலூர் கிளை மற்றும் வெள்ள லூர் இலக்கிய மன்றம் சார்பில், ‘சிந்து வெளி பண்பாடு அறிதல் அரங்கம்’ நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. வெள்ளலூர் அருகே உள்ள கின் ரவுண் டேபிள் சமுதாயக் கூடத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இலக்கிய மன்ற  நிறுவனர் வெ.கோ.பாலதண்டபாணி தலைமை வகித்தார். தமுஎகச கிளைத்  தலைவர் ஆர.பரணி வரவேற்றார். கிளைச் செயலாளர் வெ.பெ.தர்மலிங் கம் தொகுத்து வழங்கினார். தமுஎகச  மாவட்டத் தலைவர் தி.மணி, மாநிலக் குழு உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமுஎகச மாநில  பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா, மாவட்டச் செயலாளர் அ.கரீம்,  பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் நா.ராசேந்திரன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதைத் தொடர்ந்து, ‘ஆனைமலை’ நாவலை எழுதிய எழுத்தாளர் வே.பிரசாந்த் மற் றும் மாவட்ட நல் நூலகர் விருது பெற்ற  ஆர்.சுசீந்திரன், வெள்ளலூர் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  பி.பாலன் ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர். முடிவில், வெள்ளலூர் இலக் கிய மன்றம் இணை ஒருங்கிணைப்பா ளர் வெ.கு.முனுசாமி நன்றி கூறினார்.