உடுமலை, ஜன.19- முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அமரா வதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும், என அமைச்சர் ராஜேந்தி ரன், கரும்பு விவசாயிகள் சங்கத்தி னரிடம் உறுதியளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், மடத்துக் குளம் வட்டம், கிருஷ்ணாபுரம் அம ராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற் றுலா மற்றும் சர்க்கரை, கரும்பு அபி விருத்தித்துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன், மனிதவள மேலாண் மைத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் ஆகியோர் ஞாயி றன்று ஆய்வு செய்தனர். அப் போது, அமைச்சர் ராஜேந்திரனிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங் கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில், அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலை 1960 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை. மிக பழமையான ஆலையென்ப தால் கடந்த சில ஆண்டுகளாக அதன் பிழிதிறன் குறைந்து உற் பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள் ளது. இதனால் கரும்பு விவசாயி கள் விளைவித்த கரும்பினை ஆலைக்கு வழங்க இயலாத சூழ் நிலை ஏற்பட்டு, கரும்பு உற்பத்தி செய்வது கணிசமாக குறைந்துள்ள தால், விவசாயிகள் பெரிதும் பாதிப் புகுள்ளாகியுள்ளனர். இந்த ஆலைக்கு கரும்பு வழங்கினால் மட் டுமே கரும்புக்கு உரிய விலை கிடைக்கும். எனவே, இந்த ஆலையை புனரமைக்க வேண்டு மென்றும், நல்ல நிலையில் உடனடி யாக இயக்க வேண்டுமென்றும், பல்வேறு தேதிகளில் முதல்வர், துறைசார்ந்த அமைச்சர், சர்க்க ரைத்துறை ஆணையர் ஆகியோரி டம் மனு அளிக்கப்பட்டது. மேலும், மாதந்தோறும் நடைபெறும் விவசா யிகள் குறைதீர் கூட்டத்திலும் வலி யுறுத்தப்பட்டது. ஆனால், இது நாள் வரை ஆலையை புனரமைக்க தேவையான நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. மேலும், இதனுடைய துணை ஆலையான எரிசாராய வடிப் பாலை, எத்தனால் உற்பத்தி செய்வ தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், மூலப்பொருளான கழிவுப் பாகு பற்றாக்குறை காரணமாக எரி சாராய ஆலையும் இயங்காமல் உள்ளது. இதனால் இந்த ஆலைக்கு கரும்பு வழங்கி வரும் சுமார் 19 ஆயிரம் அங்கத்தினர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலை இயங்காததால், இந்த ஆலையை நம்பியுள்ள தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் தொழிலா ளர்கள் நலன் கருதி உடனடியாக ஆலையை புனரமைப்பு செய்ய வேண்டும். மூடப்பட்டுள்ள கரும்பு கோட்ட அலுவலகங்களை உடன டியாக திறக்க வேண்டும். அதற்கு தேவையான களப்பணியாளர் களை பணியமர்த்திட வேண்டும். அவர்கள் வாயிலாக கரும்பு விவசாயிகளை நேரிடையாக அணுகி கரும்பு பதிவு செய்யும் பணிகளை துவங்கிட வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலா ளர்களின் கோரிக்கையை பரிசீ லித்து ஆலையை புனரமைப்பு செய்ய தேவையான நிதியை பெற்று, ஆலையை நடப் பாண்டே இயக்கிட ஆவண செய்ய வேண்டும், என வலியுறுத்தப்பட் டுள்ளது. இதன்பின் செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் ராஜேந்தி ரன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை சீரமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதற்காக துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியருடன் ஆலைக்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளோம். மேலும், முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, இந்த ஆலையை புனரமைப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும், என்றார். இந்நிகழ் வில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பால தண்டபாணி, செயலாளர் எம்.எம்.வீரப்பன், பொருளாளர் கணேஷ், தென்னை விவசாயிகள் சங்க செய லாளர் சிவராஜ், நிர்வாகிகள் தர்ம ராஜ், நித்தியானந்தன், விவசாயி கள் சங்க நிர்வாகிகள் வெள்ளிங் கிரி, சுப்ரமணியன் மற்றும் அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர்.