பொள்ளாச்சி, ஜன.19- திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் 43 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுச ரிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு ஜன.19 ஆம் தேதியன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாடு முழு வதும் தொழிலாளர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், உழைக்கும் பெண்கள் என பெருந்திரளானோர் இப்போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தலைமை யிலான அதிமுக ஆட்சியின்போது, தொழிலாளர்களுடன் இணைந்து நின்ற விவசாய இயக்கங்களின் தலைவர்கள் மீது துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப் பட்ட திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் 43 ஆவது நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப் பட்டது. கோவை மாவட்டம், பொள் ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு சிஐடியு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பரமசிவம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் வி.ஆர்.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.துரைசாமி, மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங்கம், போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வேளாங் கண்ணி ராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். முடிவில், குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் சரவணன் நன்றி கூறி னார். இதேபோன்று, கோவை, நீலாம் பூர் சமுதாய நலக்கூடத்தில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ் விற்கு சிஐடியு விசைத்தறித் தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஜோதிபாசு தலைமை வகித் தார். கட்டிடத் தொழிலாளர் சங்க சூலூர் தாலுகா தலைவர் பூபதி, கூட்செட் சுமைப்பணி சங்க செயலா ளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் வேலு சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெ.ரவீந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் விஜயராக வன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். முடிவில், அருணாச்சலம் நன்றி கூறினார். தருமபுரி சிஐடியு, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கம் சார்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. ஜீவா தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் சி.நாகராசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுனன், விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.ஆறுமுகம் நன்றி கூறினார். சேலம் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, சிஐடியு சேலம் மாவட் டக்குழு அலுவலகமான வி.பி.சிந் தன் நினைவகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத் தார். இதில் மாவட்டச் செயலாளர் ஏ. கோவிந்தன், மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.வெங்கடபதி, மாவட்ட நிர் வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மேட்டூ ரில் நடைபெற்ற நிகழ்வில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்க தலைவர் வி.இளங்கோ, சிஐடியு நிர்வாகி செ. கருப்பண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் திருப்பூர், அனுப்பர்பாளையத் தில் பாத்திர தொழிலாளர் சங்கம் முன்பாக, தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு வீரவணக் கம் செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்ட துணைத்தலை வர்கள் கே.உன்னிக்கிருஷ்ணன், பி.பாலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.